முருக நேய அன்பர்களே! வணக்கம்!!

ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இறை திருவருளாலும் குருவருளாலும் நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிகாட்டுத்தலின்படி நடாத்தும் 15ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன். முருகன் திருவருளை நிணைந்து இணைந்து அருள் நலம் பெற பணிவோடு அழைகின்றோம்!!

முருகா

ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம்

15ம்  ஆண்டு கந்தன் கவினாறு (கந்தசஷ்டி) விழா

முருகு தமிழ் மெய்யன்பர்களே!!

வணக்கம். மேற்படி இவ்வமைப்பு நடத்தும் தனது 15ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழாவிற்கு அன்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்! முத்தமிழ் அடையாளங்கள் அனைத்தும் தன் உருவத்திலேயே காட்டும் தமிழ்க்கடவுளாகிய “அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக” என்று புலவோர் போற்றும் கந்தவேளை நாம் எந்தவேளையும் வணங்குதல் சிறப்பெனினும், கந்தன் கவினாறு நாட்களில் “ஒன்றியிருந்து நினைமின்கள் உம்தமக்கு ஊனமில்லை” என்ற அப்பர் வாக்கிற்கிணங்க நாம் அனைவரும் நேரில் இணைந்து கந்தனைக் கண்டு, அவன் புகழைக் கேட்டு மகிழ்ந்து வணங்குதல் நம் பிறவிப்பிணி தீர்க்கும் அருமருந்தாக அமையும். எனவே அப்பரம்பொருளை இனியதமிழால் பாடவும், போற்றவும், பரவவும் நல்லதொரு வாய்ப்பினை திருவருள் கூட்டியுள்ளது.

வழக்கம் போல் நிகழ்ச்சிகள் நாள்தோறும் தமிழ்மறை கூட்டு வழிபாடுடன் மாலை 5:00 மணியளவில் தொடங்கும். நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி விரிவுரை நிகழ்வுகள் கந்தன் நினைவுகளை நம் உள்ளத்தில் படியும்படி நடைபெற உள்ளன.

பொருள் பொதிந்த நிகழ்ச்சிகளை நாடறிந்த நல்லறிஞர் பெருமக்கள் தங்கள் விரிவுரையால் சிறப்பிக்க உள்ளனர். அன்பர்கள் இக்கந்தன் கவினாறு நாட்களில் எந்தை கந்தவேளின் திருவருளையும், சிந்தைக்கினிய செந்தமிழ் விருந்தையும் ஆர்ந்தின்புறுமாறு அன்புடன் அழைக்கிறோம்!

இவண், எஸ்.நாகரத்தினம் செயலாளர்

கைபேசி: +91 9841255308 மன்ற முகவரி: 8/10, பதினொன்றாம் தெரு, நியூகாலனி, ஆதம்பாக்கம், சென்னை – 600088

நன்றி
வணக்கம்

X