அறத்தமிழ் வேதம்

450.00

450.00

Quantity
Add to cart

மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன்

அறம் —> அன்பிலும்

அன்பு —> அருளிலும்

அருள் —> தவத்திலும்

தவம் —> சிவத்திலும்

சேர்க்கும் என்பதே வழிமுறை என்பதால் அறமே வீட்டிற்கும் அடிப்படை ஆவதும் காண்க. இதையே திருமூலர் வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின் ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே என்றார். வேதத்தின் அடிப்படைக் கூறு அறம் என்று கொண்டது தமிழ் வேதம் ஒன்றே! இதையே புறநானூற்றில் சிறப்புடை மரபில் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல – 31 என்று வருகிறது. அறம்: தனக்கு நன்மை என்பதே சமூகத்தில் பிறர்க்கு ஊறாக ஆகி விடக்கூடாது என்று எண்ணி வாழ்வதே அறம். ஆங்கிலத்தில் Ethics என்பர். இதையே திருவள்ளுவர் வாழ்வாங்கு வாழ்தல் என்ற காட்ட அதையே தமிழர் கொண்டனர். கீழ்க்கணக்கு நூல்கள்:

1. நாம் பிறவிக்கு வருவது – முதல்,

2. வாழ்க்கை என்பது வரவு.

3. வாழ்க்கையில் அறத்தொடு வாழச் செய்யும் முயற்சி செலவு

4. செலவு போக நமக்குக் கிடைப்பது இலாபம்.

5. இதில் நிகரமாக நிற்கும் அறப்பயனே நமது இருப்பாகிய கீழ்க்கணக்கு.

அதனால் அறநூல்கள் கீழ்க்கணக்கு நூல்கள் எனப்பட்டன. இவையே மக்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் உயர்ந்த நூல்கள் என்று கூறலாம். தமிழர்களின் பண்டைப் பண்பாட்டை அறிவதற்கு இவைகளைச் சிறந்த கருவிகள் எனலாம். தமிழர் தனித்தனிக் குடும்ப வாழ்விலே எவ்வளவு சிறந்திருந்தனர் என்பதற்கு அகப்பொருள் நூல்கள் சாட்சிகளாகும் ஆன்மிகத் துறையிலும் அரசியல் துறையிலும் பிற துறைகளிலும் தமிழர்கள் எவ்வளவு உயர்ந்த முறையைப் பின்பற்றி வாழ்ந்தனர் என்பதற்குப் புறப்பொருள் நூல்கள் சாட்சிகளாகும். துறவறத்தில் நிகழும் புலனடக்கத்தை விட இல்லறத்தில் தலைவன் தலைவியரிடையே ஏற்படும் பிரிவுகளில் விளையும் துன்பத்தை அன்பினால் ஆற்றி அமையும் புலனடக்கமே மேலானது என்று தமிழ்ச் சான்றோர் போற்றினர். ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.

பெண்ணின் அன்பு ஆதரவு தேடுவது ஆணின் அன்பு ஆறுதல் தேடுவது. அறத்தான் வருவதே இன்பம். ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர். அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே – இலக்கணம். திருக்குறள் அறம், பொருள், இன்பம், என்ற மூன்று பகுப்புகளை வெளிப்படையாக உடையது.

அறம் ஒன்றே வீட்டிற்கு அடிப்படை அதனால் அறப்பகுதியிலேயே வீடு பற்றியும் அடக்கிக் குறிப்பாகவும் காட்டப்பட்டுள்ளது. ‘இடுநீற்றால் பை அவிந்த நாகம்’ – நாலடியார். அதாவது மந்திரித்த திருநீற்றை வீசினால் படமெடுத்தாடும் பாம்பு அடங்கிவிடும் என்கிறது. நல்ல மக்கள் இன்ன குடியில் தான் அல்லது இன்ன குலத்தில் தான் பிறப்பர் என்று வரையறை செய்ய முடியாது கொல்லுவதற்காகவே பிற உயிர்களை வளர்ப்பது குற்றம்

. மனத்தைக் கட்டுப்படுத்துபவனே தவம் புரிவதற்குத் தகுதியுடையவன். ஒருவர் இறந்த பின் அவருடன் வருவது அவர் செய்த அறத்தின் பயனே. வெல்வது வேண்டில் வெகுளி விடல். – நான்மணிக்கடிகை. கலாச்சாரம் தூய தமிழ்ச்சொல் – கல்வியினால் வரும் ஒழுகலாறு. 8 நல்லொழுக்கங்களே ஆசாரத்துக்கு விதை – ஆசாரக்கோவை வினை விளையச் செல்வம் விளைவது போல் வினை இருந்தால் தான் செல்வம் கிட்டும் – சைவ சித்தாந்தம். நாள் ஆராய்ந்து வரைதல் அறம் எது வனப்பு? ஒரு நூலுக்கு இசைந்த சொல்லின் வனப்பே வனப்பு – சிறுபஞ்சமூலம்.

தூதுவரின் 6 தகுதிகளை வரையறை செய்கிறது – ஏலாதி. விருந்தினரை உபசரிப்பது எப்படி அறத்தால் ஆகும் பயன் மூன்று யார் யார் அறம் உரைக்கத் தகாதவர்கள் – இவை போன்ற செய்திகளை உடையது அறநெறிச்சாரம். மொத்தத்தில் மேற்கண்ட நூல்கள் அனைவரது வீடுகளையும் அலங்கரிக்க உதவும், வாழ்வை வழி நடத்தும், வழி காட்டும். தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது? & அறத்தமிழ் வேதம் ஆகிய இருநூல்களை உடனடியாக வாங்கிப் பயனடைவீர்! உற்றார் உறவினர்களை வாங்கச் செய்து செம்மாந்து இருக்கும் செந்நெறியில் வாழ்ந்திடச் செய்வீர்!!

Recently Viewed Books

Add to cart Quick view Wishlist

இறப்பு-விஞ்ஞானம்-இனிய சைவ சித்தாந்தம்

₹150.00 (0)
Add to cart Quick view Wishlist

தமிழ் வேதம் புத்தகங்கள்

₹1,850.00 (0)
Add to cart Quick view Wishlist

பொருட்டமிழ் வேதம்

₹450.00 (0)
Add to cart Quick view Wishlist

தமிழரின் வேதம் எது ஆகமம் எது

₹150.00 (0)
- 11% Add to cart Quick view Wishlist

இன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி

₹800.00 (0)
Add to cart Quick view Wishlist

அறத்தமிழ் வேதம்

₹450.00 (0)
X