இன்பத்தமிழ் வேதம் சொல்வது காதலின் சிறப்பு – காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம்! இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது! பொறுப்புகள் மிகுதியும் உடையது! காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்!
"மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்"
என்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறமே! அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையான "இன்பத்துப்பால்" இரண்டு பகுதிகளாக
தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு இதுவரை 120 நூல்களை இயற்றியருளியவர் நம் ஞானதேசிகர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள். வழிபாட்டு நூல்கள், நாடகம், செய்முறைப் பயிற்சி நூல்கள், வேத நூல்கள், ஆகம நூல்கள், வாழ்வியல் சடங்குகள், கோவில் விழாக்கள், பண்டிகைகள், தனித்தமிழ் நாட்காட்டி, பஞ்சாங்கம், போற்றித்திரட்டு, ஆங்கில உரைகள், மறுப்பு நூல்கள், என எழுத்துத்துறையில் பல்வேறு பரிமாணங்களை இத்தமிழ் உலகத்திற்குக் காட்டியுள்ளார். அதே போலப் பேச்சுத்துறையிலும் தோன்றிப், புறநானூறு, பெரியபுராணம், சேய்த்தொண்டர் புராணம்